நடிகை ரஷ்மிகா மந்தனா திரைத்துறை பணிநேரம் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை ரஷ்மிகா மந்தனா பான் இந்திய நடிகையான பின்பு பெரும்பாலும் மும்பையிலேயே இருக்கிறார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அடிக்கடி செய்திகளும் வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்மிகா நேர்காணலில், ”சினிமாவிலும் மற்ற துறைகளைப் போல 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என நினைக்கிறேன். நடிகர்கள், இயக்குநர்கள், லைட் மேன்கள் வரை அனைவருக்கும் குடும்பமும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது. இளமையில் நீண்ட நேரம் வேலை செய்து உடலைக் கெடுத்துக்கொண்டோம் என பிற்காலத்தில் வருந்தக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நடிகை தீபிகா படுகோன் கல்கி படப்பிடிப்பில் 8 மணி நேரத்திற்கு மேல் நடிக்க மாட்டேன் எனச் சொன்னதால் அப்படத்திலிருந்தே நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தீபிகா படுகோனிடன் கேள்வியெழுப்பியபோது, "பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் 8 மணி நேரம்தான் படப்பிடிப்பில் இருப்பார்கள். ஒரு நடிகை வெளிப்படையாகச் சொன்னால் மட்டும் ஏன் சர்ச்சையாகிறது எனத் தெரியவில்லை” என்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிக்கலில் புரோ கோட்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.