

ஓ பேபி, ஜபர்தஸ்த் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக நடிகை சமந்தா இணைந்துள்ளார்.
இம்முறை மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடிக் காட்சிகளுடன் படம் உருவாகவுள்ளதால், சமந்தாவுக்கான நட்சத்திரத் தகுதியை முழுமையாக நிறைவு செய்யும் படமாக மா இன்டி பங்காரம் இருக்கும் என இயக்குநர் நந்தினி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, 2022ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து திரும்பிய சமந்தா, 2024-ல் சிடாடல் என்ற இணையத் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா தனது வருகையைப் பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 22ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை இயக்குநர் நந்தினி இயக்குகிறார்.
இதற்கு முன்பு ஓ பேபி, ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் நந்தினியும் சம்ந்தாவும் ஒன்றாகப் பணிபுரிந்த நிலையில், தற்போது 3வது முறையாக இணைந்துள்ளனர்.
இது தொடர்பாக இயக்குநர் நந்தினி பேசியதாவது, சமந்தாவுடன் பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. இம்முறை மாறுபட்ட களத்தில் சமந்தாவைப் பார்க்கப்போகிறோம். இக்கதை சமந்தாவின் நட்சத்திர தகுதியை முழுமையாக பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | நீங்கள்தான் மாரி அந்த பைசன்: மணிரத்னம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.