

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் செயல்திறன் குறைவானவர்கள் என்ற அடிப்படையில், சக போட்டியாளர்கள் இருவரைத் தேர்ந்தெடுந்து, பிக் பாஸ் சிறைக்கு அனுப்புகிறார்கள்.
கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை, நடிகர் விஜய்சேதுபதி வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன், கலையரசன் ஆகிய 16 பேர் உள்ளனர்.
இந்த வாரம் போட்டியாளர்களின் ஒப்பனைப் பொருள்கள், சமையல் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துகொண்ட பிக் பாஸ், ஒவ்வொரு போட்டியாக வைத்து, சமையல் பொருள்களைப் போட்டியாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், வீட்டுப்பணி, போட்டிகளில் பங்களிப்பு, விதிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றில் அடிப்படையில் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் இருவரை, சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் கலையரசனை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து சிறைக்கு அனுப்புகின்றனர்.
சபரி, கனி, எஃப் ஜே, ரம்யா உள்ளிட்டோர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கலையரசன் பெயரை பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.
இதையும் படிக்க: மறுவெளியீட்டில் வசூலை வாரிக்குவிக்கும் பாகுபலி: தி எபிக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.