கார்த்திகா, கண்ணகிநகர் கபடி குழுவுக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய பைசன் படக்குழு!

ரூ. 10 லட்சத்துக்காண காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு வழங்கியது.
கண்ணகிநகர் கபடி குழுவுக்கு ரூ. 5 லட்சம் காசோலை வழங்கும் மாரி செல்வராஜ்.
கண்ணகிநகர் கபடி குழுவுக்கு ரூ. 5 லட்சம் காசோலை வழங்கும் மாரி செல்வராஜ்.
Published on
Updated on
1 min read

இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடி குழுவிற்கும் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.

கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில், அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று (அக். 31) கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார்.

கார்த்திகாவுக்கு ரூ. 5 லட்சம் காசோலை வழங்கும் மாரி செல்வராஜ்.
கார்த்திகாவுக்கு ரூ. 5 லட்சம் காசோலை வழங்கும் மாரி செல்வராஜ்.

2025 ஆம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய U-18 பெண்கள் கபடி அணியின் துணைத் தலைவராக கார்த்திகா சமீபத்தில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.

இறுதிப் போட்டியில் ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில், அவர் முக்கிய பங்கு வகித்தார், பல முக்கியமான புள்ளிகளைப் பெற்றார்.

கார்த்திகாவையும், அவரது கண்ணகி நகர் கபடிக்குழுவின் முயற்சியை பாராட்டி கெளரவிப்பதற்கு பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ், அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் பைசன் படக்குழு சார்பாக இயக்குநர் மாரிசெல்வராஜ் இன்று கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கார்த்திகாவிற்கும் , குழுவிற்கும் காசோலைகள் வழங்கினார்.

கண்ணகி நகர் கபடி குழுவினரையும் சந்தித்து இன்னும் பல விருதுகளையும் வெற்றிகளைப் பெறவேண்டும் என வாழ்த்தினார்.

Summary

Director Mariselvaraj's Bison film crew presented a cheque for Rs. 10 lakhs to Kabaddi player Karthika and the Kannaginagar Kabaddi team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com