
இயக்குநர் வர்ஷா பரத் பேட் கேர்ள் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் உருவான பேட் கேர்ள் திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்க, அஞ்சலி சிவராமன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வர்ஷா, “நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் எனச் சொல்பவர்கள்தான் இப்படத்தை உருவாக்கியவர்களின் வீட்டுப் பெண்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர்ந்தனர். இதிலிருந்தே அவர்களின் அரசியலும் மோசமான மனநிலையும் தெரிகிறது.
எங்களால் கலாசாரம் சீரழிகிறது என்கின்றனர். கலாசாரம்தான் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. அது பெண்களின் வேலையும் அல்ல” எனக் கூறியுள்ளார். வர்ஷாவின் இந்த பேச்சுக்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.