
இட்லி கடை திரைப்படத்தை இன்பன் உதயநிதி தலைமையிலான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது..

இட்லி கடை திரைப்படத்தை இன்பன் உதயநிதி தலைமையிலான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது..
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்தை, தமிழகத்தில் இன்பன் உதயநிதி தலைமையில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.
நடிகர் தனுஷ் இயக்கி அவர் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம், “இட்லி கடை”. இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் புதிய படமானது வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இட்லி கடை திரைப்படத்தை, தமிழ்நாட்டில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி பெயரில் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...