என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

கிஸ் நிகழ்வில் கோவமான விடிவி கணேஷ்...
விடிவி கணேஷ்
விடிவி கணேஷ்
Published on
Updated on
1 min read

நடிகர் விடிவி கணேஷ் ஆவேசமாகப் பேசிய விடியோ வைரலாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பின் விடிவி கணேஷாக மாறினார். தொடர்ந்து, தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர்களையும் பெற்றார்.

நடிப்பைத் தாண்டி விடிவி கணேஷின் குரலே பலரிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. தற்போது, நடிகர் கவினின் கிஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று (செப்.16) நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட விடிவி கணேஷ் தனக்கான தெலுங்கு டப்பிங்கை வேறு ஒருவர் பேசியதை அறிந்ததும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து, “நான் தெலுங்கில் பேச ஆர்வமாக இருந்தேன். அதுதான் முக்கியம். ஆனால், வேறு ஒருவர் பேசியிருக்கிறார். தயவுசெய்து என் தொழிலைக் கெடுக்காதீர்கள்” எனக் கூறினார்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. உண்மையிலேயே, இவர் ஆவேசப்பட்டு இப்படி பேசினாரா இல்லை படத்தின் புரமோஷனுக்காக பேசப்பட்டதா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Summary

actor vtv ganesh spoke about dubbing issue for kiss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com