பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்கின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்த ஸுபீன் கார்க் (வயது 52), சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
மூச்சுத் திணறலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, இன்று (செப்.19) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் ஸுபீன் கர்கின், திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில், பாடகர் ஸுபீன் கர்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவு:
“பாடகர் ஸுபீன் கர்கின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவர் இசைத்துறைக்கு ஆற்றிய பணியால் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் தளப் பதிவு:
”ஸுபீன் கர்கின் மறைவு ஒரு துயரச் சம்பவம். அவரது குரல் ஒரு தலைமுறையை அடையாளப்படுத்தியது மற்றும் அவரது திறமை உண்மையில் நிகரற்றது.
அசாமிய இசையின் நிலப்பரப்புக்கு மறுவடிவம் கொடுக்க அவர் தனது சொந்தத் துயரங்களை வென்று வந்தார். அவரது விடாமுயற்சியும் தைரியமும் ஒரு நீடித்த அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது. அவர் என்றுமே நமது இதயங்களிலும் எண்ணங்களிலும் வாழ்ந்திருப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஸுபீன் கர்க், இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Narendra Modi and Lok Sabha Opposition Leader Rahul Gandhi have expressed their condolences on the demise of famous Assamese singer Zubeen Garg.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

சட்டப்பேரவையில் மூத்த தலைவர்களின் மறைவுக்கு இன்று இரங்கல் தீர்மானம்!

இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. இரங்கல்!

நங்கூரமிட்டு சுடர்விடும் கலங்கரை விளக்கம்! - பாரதிராஜா மறைவுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இரங்கல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


