
கார்மேனி செல்வம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு அக்.17ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இயக்குநர்களான சமுத்திரக்கனி, கௌதம் மேனன் தற்போது நடிகர்களாக நடித்து வருகிறார்கள்.
பாத்வே புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கார்மேனி செல்வம் படத்தினை ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் லக்ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஏற்கெனவே, இந்தத் தீபாவளிக்கு பைசன், டீசல், டூட் ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படமும் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.