

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் கடந்த ஆக.28ஆம் தேதி ஓணம் வெளியீடாக இப்படம் வெளியானது.
இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மையமாக வைத்து நகைச்சுவை பாணியில் குடும்ப ரசிகர்கள் ரசிக்கும்படி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமானது.
இந்தப் படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹிருதயபூர்வம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை(செப். 26) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு! செப். 30 தீர்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.