ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை!

ஆஸ்திரேலியாவில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது குறித்து...
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளதுபடம் - இன்ஸ்டா/ தேவா
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் தேவாவுக்கு, ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி இன்று (செப். 27) நடைபெறுகிறது. இதற்காக, தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் நகரத்துக்கு அவர் தனது இசைக்குழுவுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தின் சார்பில், ஆஸ்திரேலிய அரசின் நாடாளுமன்றத்துக்குள் இசையமைப்பாளர் தேவா மற்றும் அவரது இசைக்குழுவினர் வரவேற்கப்பட்டனர்.

அப்போது, இசையமைப்பாளர் தேவா நாடாளுமன்ற அவைத் தலைவரின் இருக்கையில் அமர வைக்கப்பட்டதுடன், அவரிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இதுபற்றி, இசையமைப்பாளர் தேவா கூறுகையில், இந்த மரியாதை எனக்கு மட்டுமல்ல, இசை மற்றும் கலாசாரத்தை உலகெங்கிலும் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தம் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நெட்ஃபிளிக்ஸ் உடன் கைகோர்க்கும் மத்திய அரசு! ஏன்?

Summary

Music composer Deva has been awarded the highest honor in the Australian Parliament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com