நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரிஷப் ஷெட்டியிடம் காந்தாரா தனி யுனிவர்ஸ் கதையாக உருவாகுமா? எனக் கேள்கி கேட்கப்பட்டது.
அதற்கு ரிஷப், “அப்படி உருவாக காந்தாராவில் இடம் இருக்கிறது. ஆனால், நான் யுனிவர்ஸ் கதையாக எதையும் திட்டமிடவில்லை. ஒருவேளை, காந்தாரா மூலமாக அழுத்தமான இன்னொரு கதையைப் பேச விரும்பினால் படமாக எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.