வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,

``ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவதுபோல, அமெரிக்காவிடமிருந்து திரைப்படத் தயாரிப்பு வணிகம் மற்ற நாடுகளால் திருடப்படுகிறது.

டிரம்ப் பதிவு
டிரம்ப் பதிவுTruth Social

இந்த நீண்டகால மற்றும் தீர்வடையாத சிக்கலைத் தீர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவிகித வரியை விதிப்பேன். இதனை கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டு பொருள்கள் விற்கப்படுவதற்கும், பிற நாட்டு ஊழியர்கள் பணிபுரிவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரியையும் விதிக்கும் அந்நாட்டு அதிபர் டிரம்ப், தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் (ஹாலிவுட் அல்லாத) திரைப்படங்களுக்கும் வரியை விதிக்கவுள்ளார்.

இதையும் படிக்க: காஸா போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் - நெதன்யாகு இன்று சந்திப்பு!

Summary

US President Trump imposes 100% tariff on non-Hollywood movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com