நடிகர் மோகன் லாலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! கேரள அரசு அறிவிப்பு!

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு பாராட்டு விழா நடத்தப்படுவது குறித்து...
நடிகர் மோகன் லாலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்
நடிகர் மோகன் லாலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார்PTI
Published on
Updated on
1 min read

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, வரும் அக்டோபர் 4 ஆம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

71 ஆவது தேசிய விருது விழாவில், மலையாள நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் மோகன் லாலை கௌரவிக்கும் விதமாக, கேரள அரசின் சார்பில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி “மலையாளம் வனோலம், லால்சலாம்” எனும் பெயரில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் மோகன் லாலை சிறப்பிக்கும் இந்த விழாவிற்கான இலச்சினை, நேற்று (செப். 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

மேலும், 100 ஆண்டுகளைக் கடந்த மலையாள திரையுலகில் நடிகர் மோகன் லால் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியுள்ளதாக கேரள கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் கூறியுள்ளார்.

இத்துடன், முக்கிய நடிகர்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தப் பாராட்டு விழாவில் நடிகைகள் ஊர்வசி, ஷோபனா, மஞ்சு வாரியர், பார்வதி, கார்த்திகா, மீனா, நித்யா மெனன், லிஸ்ஸி மற்றும் பாடகர்கள் சுஜாதா மோகன், சுவேதா மோகன், சித்தாரா கிருஷ்ணகுமார், ஆர்யா தயாள், மஞ்சாரி, ஜோட்ஸ்னா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

Summary

The Kerala government has announced that a grand felicitation ceremony will be held on October 4 for Malayalam actor Mohanlal, who received the Dadasaheb Phalke Award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com