பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

4ஆவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு தயாரான பிரதீப் ரங்கநாதன்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படம் குறித்து...

The poster for the movie LIK.

எல்ஐகே படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஸ்ரீராம்.

Published On :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே படம் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர், “நான்காவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாராகி இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே (லவ் இன்சுரன்ஷ் கம்பெனி) திரைப்படம் ரிலீஸ் தேதியில் பல மாற்றங்கள் நடந்துள்ளன.

இதற்கு காரணமாக, விஎஃப்எக்ஸ் பணிகள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தாமதம் எனக் கூறப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென புதிய புரோமோவை வெளியிட்டு அறிவித்திருந்தார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஸ்ரீராம் படத்தின் டிரைலரைப் பார்வையிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

இப்போதுதான் எல்ஐகே டிரைலர் பார்த்தேன். பிரதீப் ரங்கநாதன் பீஸ்ட் மோடில் இருக்கிறார். முழுமையான விஷுவல் திருவிழா. ஒவ்வொரு பிரேமும் பிரம்மாண்டமாகவும் இயக்குநர் ஷங்கர் சார் படம் மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது.

நான்காவது முறையாக ரூ.100 கோடி வசூலுக்கு பிரதீப் தயாராகிவிட்டார். 2026ல் பாக்ஸ் ஆஃபிஸ் எகிறும். எஸ்.ஜே. சூர்யா வழக்கம்போல அதிரடியாக நடித்துள்ளார். எல்ஐகே அணியினருக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே (2022), டிராகன் (2025), டியூட் (2025) ஆகிய திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Fourth ₹100 crore blockbuster loading for Pradeep Ranganathan for LIK film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.