8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூல்! துரந்தர் 2 சாதனையை முறியடிக்குமா ராமாயணா?
ராமாயணா படம் வெளியாகிய 8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்தது குறித்து...
ராமாயணா - யூடியூப்
நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ராமாயணா முதல் பாகம், உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே, சன்னி தியோல் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகிய ராமாயணா படம் தீபாவளி வெளியீடாக நவ. 5ஆம் தேதி திரைக்கு வந்தது.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முக்கியமாக கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா வெளியான முதல் 8 நாள்களிலேயே ரூ. 1,000 கோடி வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், உலகளவில் ரூ. 1,000 கோடி வசூலித்த இந்திய திரைப்படங்கள் வரிசையில் 11-ஆவது இடத்தை ராமாயணா பெற்றது. அதுமட்டுமின்றி, அதிவேகமாக ரூ. 1,000 கோடி வசூலித்த படங்களின் வரிசையில் புஷ்பா 2 (7 நாள்கள்), துரந்தர் 2 (7 நாள்கள்) படங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தையும் ராமாயணா (8 நாள்கள்) பிடித்தது.
மேலும், இந்தாண்டில் அதிகம் வசூலித்த துரந்தர் 2 (ரூ. 1,813 கோடி) படத்தின் வசூலை ராமாயணா முதல் பாகம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Summary
Ramayana Box Office Collection Day 8: Film Crosses Rs 1,000 Crore Mark Globally
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


