ராமாயணா வசூல் வேட்டை! 5 நாள்களில் இவ்வளவா?
ராமாயணா திரைப்படத்தின் முதல் 5 நாள்கள் வசூல் விவரம்...

ராமாயணா பட போஸ்டர் - படம்: எக்ஸ்
ராமாயணா திரைப்படத்தின் முதல் 5 நாள்கள் வசூல் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ளது.
முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த திரைப்படம் முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 663 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மேலும், நேற்று மட்டும் ரூ. 107.50 கோடி வசூலித்து, படம் வெளியான முதல் திங்கள்கிழமையில் அதிக வசூலை ஈட்டிய துரந்தர் 2-ன் வசூல் சாதனை முறியடித்துள்ளது.
மேலும், ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 1 லட்சம் டிக்கெட்கள் ஆன்லைன் வாயிலாக விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதனால், ராமாயணா திரைப்படத்தின் வசூல் இந்த வார இறுதிக்குள் ரூ. 1000 கோடியைத் தாண்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Summary
Ramayana’s box office spree - First 5 days collection
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


