பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

எதிர்நீச்சல் தொடர் 1200 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவது தொடர்பாக...

News image

எதிர்நீச்சல் - 2 - படம்: யுடியூப்

Updated On :6 ஏப்ரல் 2026, 3:29 pm IST

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் 1200 நாள்களைக் கடந்துள்ளது.

முதல் பாகத்தில் இருந்த பாத்திரங்களை வைத்தே அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் திருச்செல்வம். எனினும், நாயகி மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார். கனிகாவுக்கு பதிலாக ஸ்ரீஜா நடிக்கிறார்.

மேலும், இந்தத் தொடரில் ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன், கமலேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரின் கதை விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பு செய்யப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கிறது.

எதிர்நீச்சல் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. பின்னர், இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடர் 1200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது உள்ள சூழலில் தொடர்கள் குறுகிய காலத்தில் முடிக்கப்படும் நிலையில், எதிர்நீச்சல் தொடர் 1200 நாள்களைக் கடந்துள்ளது இந்தத் தொடருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்ன திரை விருதுகளில் எதிர்நீச்சல் தொடர் 4 பிரிவுகளில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The second installment of the series Ethir Neechal, currently airing on Sun TV, has crossed the 1,200-day mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.