தமிழக ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

யஷ் 2.0 ஆக டாக்ஸிக் அமையும்: இயக்குநர் கீது மோகன்தாஸ்

டாக்ஸிக் திரைப்படம் குறித்து கீது மோகன்தாஸ்...

இயக்குநர் கீது மோகன்தாஸ்

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:37 pm IST

இயக்குநர் கீது மோகன்தாஸ் நடிகர் யஷ் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.

டாக்ஸிக் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படக்குழுவினர் தொடர்ந்து முன்வெளியீட்டு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று (ஆக. 24) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ், “எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அதே நிலை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான நடிகர் யஷ் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார்.

‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு யஷ் காட்டினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது. அனைவருக்கும் நன்றி. “ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் நிறுவனத்தின் வெங்கட் நாராயணன், “டாக்ஸிக் ஒரு புதிய பாதையை உருவாக்கும் படமாக இருக்கும். கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் முற்றிலும் வேறொரு அனுபவமாக இருக்கும். நயன்தாராவுக்கு என்று தனி ஒரு ஆரா இருக்கிறது. அவரது கதாப்பாத்திரம் திரையில் மிகப்பெரிய மாஸை உருவாக்க போதுமானது. கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் அசாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நடிகர் யஷ் இந்தப் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் உண்மையிலேயே அசாத்தியமானவர் யஷ். அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்கள் திரைப்பயணத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மைல்கல்லாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

Director Geetu Mohandas has spoken emotionally about actor Yash.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.