நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படம் குறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சுந்தர் சி அப்படத்திலிருந்து விலக, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி 173-வது படத்தை இயக்குகிறார்.
மேலும், இப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த, தி அவுட்பிட் (the outfit) திரைப்படத்தின் தழுவலாகவே உருவாகவுள்ளதாகவும் இதில் தையல்காரர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வித் லவ் திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “தலைவர் - 173 திரைப்படத்தை நான்தான் இயக்குகிறேன் என்றதும் பலருக்கும் இவனா என்கிற பதட்டம் உண்டாகியுள்ளது. ஆனால், கண்டிப்பாக இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிறைவுடன் வருவீர்கள். இது என் வாக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யா - 47 படத்தில் மோகன்லால்? இயக்குநர் பதில்!

பாலன் மிகச்சிறந்த மலையாளத் திரைப்படம்: இயக்குநர் பிரியதர்ஷன்

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
விடியோக்கள்

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly




