கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஓடிடி வெளியீட்டிலும் கொண்டாடப்படும் துரந்தர்!

ஓடிடியில் வெளியான துரந்தர்...

Published On :

துரந்தர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பின் பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது.

ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1300 கோடிகளைத் தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து இந்த இமாலய சாதனையைச் செய்தது இந்திய திரைத்துறையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதன் இரண்டாம் பாகம் வருகிற மார்ச் மாதம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், துரந்தர் - 2 டீசரை தயாரிப்பு நிறுவனம் தயாராக வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் துரந்தர் வெளியாகி இந்தியளவில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் 3.30 மணிநேரம் ஓடக்கூடியதாக இருந்தாலும் எங்கும் சலிப்பு ஏற்படாத திரைக்கதையும் உருவாக்கமும் அசத்திவிட்டதாக வியந்து பாராட்டி வருகின்றனர்.

Summary

dhurandhar movie get good response from ott release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.