போர் பதற்றம் காரணமாக துரந்தர் - 2 திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் பல மொழி ரசிகர்களும் இதன் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர். இப்படம் பான் இந்திய வெளியீடாக வருகிற மார்ச் 19 ஆம் தேதி உலகளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் வடிவம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாம்.
முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் துபை உள்ளிட்ட நகரங்களில் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், துரந்தர் - 2 திட்டமிட்டபடி வெளியாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், இந்தியாவிலேயே இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்பதால் அதேநாளில் வெளியாகவே வாய்ப்புகள் இருக்கின்றன.
போர் பதற்றம் காரணமாகவே டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

ஈரான் போர்: கோவை - அபுதாபி விமான சேவை ரத்து

சசிகுமாரின் பிரீடம் வெளியாகுமா?

ஓடிடி வெளியீட்டிலும் கொண்டாடப்படும் துரந்தர்!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

