அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சசிகுமாரின் பிரீடம் வெளியாகுமா?

சசிகுமாரின் பிரீடம் குறித்து...

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 4:19 pm IST

நடிகர் சசிகுமார் நடித்த பிரீடம் திரைப்பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ திரைப்படம் தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருந்தனர்.

இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றுவரை வெளியீடு ஆகவில்லை.

தற்போது, சசிகுமார் நடித்த மை லார்ட் திரைப்படம் வருகிற பிப். 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் கவனிக்கப்பட்டால், மீண்டும் பிரீடம் திரைப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.