

நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபி ரஜினியின் 173வது திரைப்படத்தை இயக்குகிறார்.
மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி இணையலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாகவும் இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் உருவான அமரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் மீண்டும் இக்கூட்டணி இணையலாம் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.