விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் கதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொடரை, தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 2023 ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
டிஆர்பியில் முன்னணியில் உள்ள இந்தத் தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்
அதிலும், இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு (லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களுக்கு சமூக ஊடங்களில் தனிப்பட்ட பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதனிடையே, மகாநதி தொடரின் கதையின்படி விஜய் - காவேரி ஜோடிக்கு குழந்தைப் பிறந்துள்ளது.
இந்த நிலையில், மகாநதி தொடரின் கதையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் காட்சிகளை, முன்னோட்ட விடியோவாக தொடர் குழு வெளியிட்டுள்ளது.
மகாநதி தொடரின்ன் கதையானது 5 ஆண்டுக்கு முன்னோக்கி சென்றுள்ளது. திடீரென்று கதையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கதையின்படி கனவாக இருக்குமோ அல்லது தொடர் நிறைவடைகிறதா என்று ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
There has been a sudden twist in the story of the Mahanadi series airing on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் படப்பிடிப்பு தொடக்கம்! வெளியீடு எப்போது?

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!

1000 நாள்களைக் கடந்த சிறகடிக்க ஆசை தொடர்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




