
ஜி பேயில் ரூ. 500 டூ ரூ. 11 கோடி: அபிஷன் ஜீவிந்த் நண்பர் 'வித் லவ்'!
ஜி பேயில் ரூ. 500 கேட்ட நிலையிலிருந்து, அபிஷன் ஜீவிந்தின் வித் லவ் படம் ரூ. 11 கோடி வசூலித்ததாக அவரது நண்பர் நகைச்சுவை

வித் லவ் படத்தின் நடிகர் அபிஷன் ஜீவிந்தின் வளர்ச்சியை அவரது நண்பர் பாராட்டிப் பேசியது சமூக ஊடகங்களில் நகைச்சுவையாகப் பகிரப்பட்டு வருகிறது.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் கதைநாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடித்து வெளிவந்த வித் லவ் படம், 3 நாள்களில் ரூ. 11 கோடி வசூலித்தது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்தின் இந்த வெற்றியை அவரது நண்பர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்த பதிவில் அபிஷன் ஜீவிந்தின் நண்பர், ஜீ பேயில் ரூ. 500 இருக்குமா டா என்ற நிலையிலிருந்து, 3 நாள்களில் ரூ. 11 கோடி வசூல் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அபிஷனும் சிரிக்கும் எமோஜியை பகிர்ந்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன் நடித்து, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள வித் லவ், பிப். 6 ஆம் தேதியில் வெளியானது. இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வித் லவ் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை பிப். 10 ஆம் தேதியில் நேரில் அழைத்து பாராட்டினார்.
Summary
Abishan Jeevinth's friend praises the film With Love
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






