

ஜன நாயகன் திரைப்படம் பிப்ரவரியில் வெளியாவது சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன நாயகன் திரைப்படம் பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று இறுதியில் தணிக்கை வாரியத்துக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அதனால், ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிப். 20 ஆம் தேதி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்கவில்லையாம். இதனால், இப்படம் தேர்தலுக்கு பின்பே வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் என்பதால் அம்மாதம் படம் வெளியிடப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஐபிஎல் 2026: ஹர்ஷித் ராணா விலகல்?

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?

ஒரே நாளில் வெளியாகும் டாக்ஸிக், ஜன நாயகன்?

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

