தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இணையத்தில் வைரலாகும் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு பத்திரிகை!

ரஷ்மிகா - தேவரகொண்டாவின் திருமண வரவேற்பு பத்திரிகை இணையத்தில் வைரல்.

ரஷ்மிகா - தேவரகொண்டா - படம்: X

Published On :

நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) ஆகிய படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.

அடுத்ததாக, இந்தாண்டு செப்டம்பரில் வெளியாகவிருக்கும் ரணபலி எனும் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை இருவரும் பல்வேறு தருணங்களில் மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில், திருமண நிச்சயதார்த்தமும் அண்மையில் நடந்ததாகத் தெரிகிறது.

இருவருக்கும் வருகிற பிப். 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு பத்திரிகை

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண வரவேற்பு பத்திரிகை - படம்; X

மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,ஹைதராபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பத்திரிகையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகாவுக்கு பிப். 26 ஆம் தேதி திருமணமும் மார்ச் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸுல் உள்ள தாஜ் கிருஷ்ணாவில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Actor Vijay Deverakonda - Rashmika Mandanna's wedding reception magazine is going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.