பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஏகே - 64 திரைப்படத்தில் மோகன்லால்?

அஜித் திரைப்படத்தில் மோகன்லால்...

News image

அஜித் குமார், மோகன்லால்

Updated On :18 பிப்ரவரி 2026, 4:35 pm IST

ஏகே - 64 திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அஜித்தின் புதிய கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுங்கரா, ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்கிற பெயரில் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனில் சுங்கரா நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மனு உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏகே - 64 திரைப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.