ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.
இந்தப் படத்தை முடித்து கமல்ஹாசனுடன் நடிகர் ரஜினி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தை “ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இருவரும் இணையும் படத்தின் ப்ரோமோ விடியோ திரையரங்குகளில் நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஜினி - கமல் இணையும் புதிய படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் என்று போஸ்டர் வெளியிட்டு பட தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இரு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன்தான் இயக்குவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்திற்கும் இசையமைப்பவர் அனிருத்தான். அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், தில்லு முல்லு என பல படங்களில் ரஜினியும் - கமலும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

ரஜினி - கமல் படத்தின் புரோமோ!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


