மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற போலீஸ் போலீஸ் இணையத் தொடர் விரைவில் நிறைவுபெற உள்ளது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று (பிப். 22) நடைபெற்றது.
ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சின்ன திரையில் செம்பருத்தி தொடரின் மூலம் புகழ் பெற்ற ஷபானா, போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
கோன், சிதம்பரம், மணிவண்ணன் என மூன்று இயக்குநர்கள் இந்த இணையத் தொடரை இயக்கி வருகின்றனர். ஜேம்ஸ் விக்டர், சரண் ராகவன் என இருவர் இசையமைக்கின்றனர்.
2025 செப். 19 முதல் ஒளிபரப்பாகிவரும் இந்த இணையத் தொடர், விரைவில் முடியவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று (பிப். 22) நடைபெற்றுள்ளது.
போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் குழு - படம் - இன்ஸ்டாகிராம்
இதனைக் கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்கள் என அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Summary
The shooting of the Police Police web series has been completed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாரண்ட் குழுவினரை வாழ்த்திய பாண்டிராஜ்!

கல்யாண கலாட்டா... கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் படப்பிடிப்பு தொடக்கம்! வெளியீடு எப்போது?

புனிதா தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




