மதுரை மண்ணில் காதல் காவியம்! இர்ஃபானின் புதிய தொடர் அறிவிப்பு!

நடிகர் இர்ஃபானின் புதிய தொடர் அறிவிப்பு தொடர்பாக...
மதுரை மண்ணில் காதல் காவியம்! இர்ஃபானின் புதிய தொடர் அறிவிப்பு!
Updated on
1 min read

நடிகர் இர்ஃபான் மீண்டும் சின்ன திரையில் அறிமுகமாகும் புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி புத்தாண்டு நாளான இன்று(ஜன. 1) வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகர் இர்ஃபான். இத்தொடரில் வினீத் பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து, இர்ஃபான் சரவணன் மீனாட்சி தொடரில் குறுகிய காலம் மட்டுமே நடித்திருந்தாலும், இத்தொடர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனறே கூறலாம்.

இதனிடையே, மெர்குரி பூக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானா இர்ஃபான், பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், ரூ, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாநடிகை நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்த இர்ஃபான், புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகர் இர்ஃபான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள வாகை சூட வா என்ற புதிய தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் பவித்ரா, குயிலி, மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பொறுப்பாகப் படித்து முன்னேற நினைக்கும் நாயகிக்கும், பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நாயகனுக்கும் இடையேயான காதல் கதையாக இத்தொடர் எடுக்கப்படுகிறது. மேலும், இந்தத் தொடர் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்ப்படுகிறது.

வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு தேதி போன்ற அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சின்ன திரையில் இர்ஃபான் நடிக்கவுள்ளது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

The trailer for the new series, which features actor Ivan's reduction to the same character, was released on New Year's Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com