யோகி பாபுவின் 300-வது படம்! பெயர் அறிவிப்பு!

யோகி பாபுவின் 300-வது படத்தின் பெயர் பற்றி...
யோகி பாபுவின் 300-வது படம்! பெயர் அறிவிப்பு!
Updated on
1 min read

யோகி பாபு படத்தின் போஸ்டர்: நடிகர் யோகி பாபுவின் 300-வது படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் உதவி இயக்குநராக இருந்த யோகி பாபு, அமீரின் யோகி படத்தில் முதல்முறையாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, பையா, வேலாயுதம், கலகலப்பு, வீரம், மான் கராத்தே உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.

பின்னர், மண்டேலா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான யோகி பாபு, பொம்மை நாயகி, யானை முகத்தான், லக்கி மேன், தூக்கு துரை, குழந்தைகள் முன்னேற்ற கழகம் எனப் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

மண்டேலா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

இந்த நிலையில், தேவ் சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கும் தனது 300-வது படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெயரை அறிவிக்கும் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு அர்ஜுனன் பேர் பத்து எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Summary

Yogi Babu's 300th film: The title has been announced

யோகி பாபுவின் 300-வது படம்! பெயர் அறிவிப்பு!
எல்லோரும் நல்லா இருப்போம்! ஜன நாயகனின் புதிய போஸ்டர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com