

நடிகர் விக்ராந்த் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியானது.
ஹார்ட் பீட், ஆபிஸ், போலீஸ் போலீஸ் இணையத் தொடர்களைத் தொடர்ந்து, எல்பிடபுள்யூ இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று( ஜனவரி 1) வெளியாகியுள்ளது.
இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘ஹார்ட்பீட்’ தொடரை தயாரித்த அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.
மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த ஒருவர், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக வென்றாரா? இல்லையா? என்பதுதான் எல்பிடபுள்யூ தொடரின் கதை.
இந்த நிலையில், 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.