

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் தோட்டம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பான் இந்திய படமாக உருவாகும் இதில் நாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடிக்க, சமீபத்தில் இதன் படத் தலைப்பு டீசர் அனிமேஷனாக வெளியாகி கவனம் ஈர்த்தது.
மலையாளத்தில் மீண்டும் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷின் இந்தப் படத்தினை ரிஷி சிவக்குமார் இயக்குகிறார்.
ஃப்ர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரடக்ஷன்ஸ், மார்கா என்டர்டெயினர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மிஷ்கின், விஜய் தேவர்கொண்டாவுடன் புதிய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா வெளியானது.
புதிய போஸ்டரைப் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், “அவள் நடத்துவரும்போது, இந்தாண்டு ஒளி மயமாகும். தோட்டம் உலக்த்தில் இருந்து அனைவருக்கும் பயமில்லாத புத்தாண்டு வாழ்த்து” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.