

ஹாலிவுட் நடிகை நிக்கோல் மேரி கிட்மேனைச் (59 வயது) சந்தித்த இந்திய நடிகை நதியா (58 வயது) தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு அன்று சந்தித்த விடியோவை வெளியிட்டு தான் அவரது மிகப்பெரிய ரசிகை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நோக்கதே தூறத்து காண்ணும் நாட்டு எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகை நதியா சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமான நதியா தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக வலம்வந்தார்.
தோனி தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரிட் எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த அவர் ஹாலிவுட் நடிகை நிக்கோல் மேரி கிட்மேனை சந்தித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நிக்கோல் மேரி கிட்மேன் ஆறு கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நடிகையை சந்தித்தது குறித்து நதியா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:
ரசிகைக்காக தருணம்! நிக்கோல் மேரி கிட்மேனைச் சந்திக்க ஓடினேன். ஆஸ்திரேலியாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவர். மிகவும் அன்பான, அழகான அவரைச் சந்தித்தது ஒரு விருந்துதான்.
அவர் என்னைவிட உயரமாக இருந்தும் புகைப்படத்திற்காக குனிந்தார். அழகான 6 அங்குலம் வித்தியாசம் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.