புரோமோவில் சிரிக்க வைத்த ஜீவா - ராஜேஷ்!

நடிகர் ஜீவா - ராஜேஷ் கூட்டணியில் புதிய படம்...
jiiva and rajesh
ஜீவா, ராஜேஷ்
Updated on
1 min read

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் திரைப்படத்தின் பெயர் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக பிளாக் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார். விரைவில், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படமும் திரைக்கு வருகிறது.

தொடர்ந்து, ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ஜாலியா இருந்த ஒருத்தன் எனப் பெயரிட்டுள்ளதாக புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

jiiva and rajesh
ஜன நாயகன் டிரைலரில் இடம்பெற்றவர் இவரா?

புரோமோவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் ஜீவாவும், ராஜேஷும் பேசும் வசனங்கள் சிரிக்க வைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com