இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் புதிய தோற்றத்திலிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான் தமிழ், ஹிந்தி என படங்களைத் தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார். முதல்முறையாக, இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து ராமாயணா திரைப்படத்திற்கு இசையமைக்கவும் செய்வதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது, நடிகர் பிரபு தேவாவுடன் மூன் வாக் என்கிற திரைப்படத்தில் ஐந்து பாடல்களைப் பாடி இசையமைத்ததுடன் அதில் நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ’என் புதிய தோற்றம்’ என ஆரம்பகட்ட தாடி, மீசையுடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ரஹ்மான் என்றாலே மழிக்கப்பட்ட தாடியும் மீசையும் கொண்டவர் என்கிற பிம்பமே இருந்து வந்தது. இப்படம் அதனை மாற்றியிருப்பது ரசிகர்களிடம் புன்னகையை வரவழைத்துள்ளது.
மேலும், இது ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், ”நீங்கள் ஏ.ஆர். ரஹ்மானின் தம்பியா?” என்றும் கேட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.