திரௌபதி - 2 படத்தில் சின்மயி பாடிய பாடலை நீக்கி வேறு பாடகியைப் பாட வைக்க இயக்குநர் மோகன். ஜி முடிவு செய்துள்ளார்.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி - 2 திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் பாடலான எம்கோனே பாடலைச் சின்மயி பாடியிருந்தார்.
இதன் புரோமோ வெளியானதும் ரசிகர்கள், “பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன். ஜி திரைப்படத்திற்கு ஏன் பாடினார்? எனக் கடுமையாக விமர்சித்தனர்.
இதனைக் கவனித்த சின்மயி, “இந்தப் பாடலைச் சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். முன்பே இதை அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன்.” என வருத்தம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இயக்குநர் மோகன். ஜி, “என் திரைப்படத்தில் ஒரு கருத்து பதிவாகிறது என்றால், அது என்னுடைய சொந்தச் சிந்தனை மட்டும்தான். அதற்காக, நீங்கள் என்னைக் குறி வைக்கலாம். அதைவிடுத்து, என் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைத் தாக்குவது என்பது கோழைத்தனமானது” எனக் கூறினார்.
இந்த நிலையில், சின்மயி பாடிய அப்பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக மோகன். ஜி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2வது புரோமோ பாடல்!

நடிகர் சூர்யா பாடிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 2-வது பாடலின் புரோமோ!

இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பாட வேண்டும்: வைக்கம் விஜயலட்சுமி

பாடகி ஜானகி பாடுவதற்குக் கடினமாக அமைந்த பாடல் இதுதான்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



