நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “சர்வம் மாயா”. இந்தப் படத்தில், நடிகர்கள் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகன இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படம் வெளியான 10 நாள்களிலேயே ரூ. 101 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு நல்ல கம்பேக்-ஆக சர்வம் மாயா அமைந்துள்ளது.
இந்தாண்டு, டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகியவை நிவின் நடிப்பில் வெளியாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.