ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய விழாவாக மாறியது. தொடர்ந்து, படத்தின் டிரைலர் பான் இந்திய மொழிகளில் அண்மையில் வெளியானது.
இதில், தமிழ் டிரைலர் மட்டுமே யூடியூபில் விரைவாக 3.7 கோடி (37 மில்லியன்) பார்வைகளைக் கடந்து, விரைவாக அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட டிரைலர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், ஹிந்தியில் 1.1 கோடி பார்வையையும் தெலுங்கில் 74 லட்சத்தையும் கடந்துள்ளது. இன்னும் சில நாள்களில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் சினிமா டிரைலர் என்கிற சாதனையைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.