

தானும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்தான் என நடிகை வியானா பேசிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. போட்டி முடிய இன்னும் ஒன்ரரை வாரமே உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அரோரா, கானா வினோத், விக்கல்ஸ் விக்ரம், சபரி என 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இவர்களை குழப்பும் நோக்கத்தில் பழைய போட்டியாளர்கள் அனுப்பப்பட்டு வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வியானா முதலில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நிலையில், தற்போது பிரவின்ராஜ் தேவசகாயம், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் பிக் பாஸ் விட்டிற்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் பலரும் போட்டியாளர்களை குழப்பும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, போட்டியாளர்களின் மனநிலையை குலைக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக விக்கல்ஸ் விக்ரமை நோக்கி வியானா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். இதேபோன்று கானா வினோத் மீது பிரவீன் குற்றம்சாட்டுகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ள வியானா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தானும் ஒரு வெற்றியாளர்தான் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இரவில் அனைவரும் தூங்கிய பிறகு கேமரா முன்பு வியானா பேசியதாவது,
''நானும் வெற்றி பெற்றுதான் வெளியே சென்றுள்ளேன். பிக் பாஸில் இருந்த 70 நாளும் நான் வெற்றியாளர்தான். இந்த வீடு என்னுடையதும்கூட.
ஆனால், மீண்டும் இங்கு வந்து நான் நடந்துகொள்வது எனக்கும் வருத்தமாகவே உள்ளது. நாம் நறுக்கென 4 வார்த்தை கேட்கும்போது அவர்களும் நம்மை அவ்வாறு கேட்கத்தானே செய்வார்கள். கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். இனி ஜாலியாக இருக்கலாம்'' என ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கேமரா நோக்கிப் பேசுகிறார்.
I am also Bigg Boss 9 winner Viyana spoke at midnight in the Bigg Boss house
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.