

ஜனநாயகன்: நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை படக்குழுவினர் தொடர்ந்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், ஜன நாயகன் தான் தனது கடைசிப் படம் என அறிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில் படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வழங்கப்படாமல் இருப்பது பட வெளியீட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் டிக்கெட் முன்பதிவு ஒருசில இடங்களைத் தவிர பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் தொடங்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை இன்று பிற்பகலுக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.