

ஆங்கிலப் புத்தாண்டில் நடனமாடியதற்காக நடிகை தமன்னாவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெறுமனே 6 நிமிஷ நடனத்திற்கு ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிச.31ஆம் தேதி இரவு கோவாவில் பாகா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
’மில்க் ப்யூட்டி’ என ரசிகர்களால் அழைக்கபடும் தமன்னாவின் நடனத்துக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் அவரது சிறப்பு நடனக் காட்சிகள் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.
குறிப்பாக ஆஜ் கி ராட், காவாலா, நஷா எனும் பாடல்கள் மிகவும் வைரலாகின.
கடைசியாக நடிகை தமன்னா நடிப்பில் ஒடேலா 2 வெளியானது. தற்போது, இவர் மூன்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.