ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு மாற்றம் காரணமாக சில திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியத்திடமிருந்து எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சென்சார் சான்றிதழுக்கான வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் ஜன நாயகன் பொங்கல் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகிக்கொண்டது.
மேலும், இப்படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அந்த வாரங்களில் வெளியீடுகளுக்குத் திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் விஜய் படத்தால் பின்வாங்கலாம் எனத் தெரிகிறது. முக்கியமாக, நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இதுபோக, நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஜன. 30 ஆம் தேதி வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தேதியும் தள்ளிச்செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










