ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பராசக்திக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா?

பராசக்தி தணிக்கை குறித்து...

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா

Published On :8 ஜனவரி 2026, 12:11 pm IST

பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் அதிக பொருள்செலவில் உருவான பராசக்தி திரைப்படம் வருகிற ஜன. 10 ஆம் தேதி உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.

மொழித் திணிப்புக்கு எதிரான தமிழ் மாணவர்களின் எழுச்சியாகவும் உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டும் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

டிரைலர் காட்சியில், “நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள். ஹிந்தி மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை” போன்ற வசனங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் வெளியாகவுள்ள படத்திற்கு ஏன் இதுவரை சான்றிதழ் கொடுக்கவில்லையென கேள்விகளும் எழுந்துள்ளன.

ஹிந்தி மொழித்திணிப்புக்கு எதிராக உள்ளதால் தணிக்கை வாரியம் நிறைய காட்சிகளை, வசனங்களை நீக்கச் சொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால் வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பராசக்தியும் இழுத்தடிக்கப்படுவது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Summary

parasakthi and censore issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.