நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
actor silambarasan on jana nayagan postponed issue
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

