

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடர் விரைவில் முடிவடைகிறது.
இந்தத் தொடர் 2023 மே மாதம் முதல் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் - வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில், செந்தில் குமார் நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சுபிக்ஷா, ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சூழ்நிலை காரணமாக தாய் சிறைக்குச் சென்ற பிறகு, தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளை மையப்படுத்தி அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மூத்த அண்ணனாக இருந்து, தங்கைகளை பராமரித்து வரும் அண்ணாவை(செந்தில் குமார்) பிரதானப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர். வில்லனாக நடித்துவரும் பூவிலங்கு மோகனின் நடிப்புக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
ஏ. துர்கா சரவணன் இயக்க, ராஜம்மாள் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
அண்ணா தொடர், விரைவில் நிறைவடைகிறது. அண்ணா தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவுப் பகுதி விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.