பெண் இயக்குநரால் எடுக்கப்பட்ட காட்சியா இது? ஆச்சரியப்படுத்திய டாக்ஸிக் டீசர்!

டாக்ஸிக் டீசருக்கு வரவேற்பு...
நடிகர் யஷ்
நடிகர் யஷ்
Updated on
1 min read

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் டீசர் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் டாக்ஸிக்.

இன்று நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அறிமுக டீசர் வெளியானது. இதில், யஷ் ஒரு பெண்ணுடன் காருக்குள் நெருக்கமான உறவில் இருப்பதும் பின், வெளியே வந்து எதிரிகளைக் கொடூரமாகத் தாக்குவதுமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும், கார் காட்சியைப் பலரும் வியந்துள்ளனர். முக்கியமாக, இயக்குநர் ராம் கோபால் வர்மா, “கீது மோகன்தாஸை எந்த ஒரு ஆணுடனும் ஒப்பிட முடியாது. என்னால் நம்பவே முடியவில்லை, இவரிடமிருந்து இப்படியொரு காட்சியா?” எனப் பாராட்டியுள்ளார்.

அதேபோல், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, “டாக்ஸிக் டீசர் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இயக்குநர் கீதுவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் யஷ்
உண்மையான திருவிழா... விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன்!
Summary

geethu mohandass gets appreciated from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com