

பிக் பாஸ் வீட்டிலிருந்து பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14வது வாரத்தை எட்டியுள்ளது. போட்டி முடிய இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், அனைவரும் முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
தற்போது அரோரா, சான்ட்ரா, திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் அரையிறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர்.
இதில், அரோரா நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) டிக்கெட்டை பெற்றார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். எஞ்சிய 5 பேரில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்த வாரத்தில் பணப்பெட்டியில் பணம் சேர்ப்பதற்காக வைக்கப்படும் டாஸ்க்குகள் வைக்கப்பட்டன. போட்டியாளர்கள் முனைப்புடன் போட்டிகளில் பங்கேற்று ரூ. 13 லட்சம் பணத்தை சேர்த்தனர்.
'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் புரோமோஷனுக்கு வந்தவர்கள் ரூ. 5 லட்சம் கொடுத்த நிலையில், பணப்பெட்டியில் ரூ. 18 லட்சம் சேர்ந்தது.
இந்த நிலையில், பாடகர் கானா வினோத் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
அவர்தான் பிக் பாஸ் 9வது சீசனின் வெற்றியாளர் ஆவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றிருக்கக்கூடாது என்று சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.